மாநகர உறுப்பினர்களுக்கு மனநலம் பாதிப்பு! -மருத்துவ பரிசோதணை தேவை என்கிறார் ரெமிடியஸ்- - Yarl Thinakkural

மாநகர உறுப்பினர்களுக்கு மனநலம் பாதிப்பு! -மருத்துவ பரிசோதணை தேவை என்கிறார் ரெமிடியஸ்-

யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்த வேண்டியவர்கள் என்று ஈ.பி.டி.பி கட்சியின் மாநகர சபை உறுப்பினர் மு.ரெமிடியஸ் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாக்கிழமை காலை நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணத்தில் அதிகரிரத்துவரும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உறுப்பினர் மு.ரெமிடியஸ் தனது கருத்தினை முன்வைத்திருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் எழுந்து போதைப் பொருள் கட்டுப்பாடு சம்மந்தமாக அல்லாமல் பிரிதொரு விடயம் தொடர்பில் பேசி ரெமிடியஸ்சுடன் முரண்பட்டுக் கொண்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ரெமிடியஸ் சபையில் உள்ள உறுப்பினர்கள் சிலர் மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று சாட்டியிருந்தார்.

ரெமிடியஸின் கருத்தினை அடுத்து எழுந்த உறுப்பினர் தர்சானந் மருத்துவ பரிசோதணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உறுப்பினரை பார்த்து பேசிய வார்த்தையை ரெமிடியஸ் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இருப்பினும் தான் எந்த சந்தர்ப்பத்திலும் அக் கருத்தினை வாபஸ்பெற போவதில்லை. தான் தெரிவித்த கருத்து உண்மைமேயே என்று ரெமிடியஸ் மீண்டும் சபையில் அடித்துக் கூறினார்.

ரெமிடியஸ் கூறிய கருத்தினை வரவேற்ற முதல்வர் அக் கருத்தினை வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பது தொடர்பில் எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
Previous Post Next Post