வெப்பம் உச்சத்தை தொடும்! - Yarl Thinakkural

வெப்பம் உச்சத்தை தொடும்!

அதிகரித்துக் காணப்படும் வெப்பத்துடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், போதுமான அளவு நீரை பருகுமாறும் கோரப்பட்டுள்ளது.
Previous Post Next Post