யாழ்.பல்கலை ஊழியர்கள் போராட்டத்தில்! - Yarl Thinakkural

யாழ்.பல்கலை ஊழியர்கள் போராட்டத்தில்!

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கைவிரல் கண்ரேணை இயந்திர பதிவுகள் மூலம் வருகை மற்றும் மீள்வருகையை பதிவு செய்தலுக்கு எதிர்ப்பு வெளியிட்டும், ஊழியர் நலன்சார்ந்த பல்வேறு அம்சக் கோரிக்கையினை வலியுறுத்தியும் அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். 

கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னர் இன்று புதன்கிழமை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post