நடிகர் ஆர்யா-சாய்ஷா திருமணம் - Yarl Thinakkural

நடிகர் ஆர்யா-சாய்ஷா திருமணம்
நடிகர்களான சாயிஷா, ஆர்யா ஆகியோர் இன்று திருமணம் செய்து கொண்டனர். பிரபல ஹிந்தி நட்சத்திரங்களான திலிப் குமார்-சாயிரா பானு தம்பதியின் பேத்தி தான் நடிகை சாயிஷா. இவர் வனமகன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் படத்தில் நடித்தார். அப்போது ஏற்பட்ட நட்பு பின்பு காதலாக மாறியுள்ளது.

கடந்த மாதம் காதலர் தினத்தன்று தங்களது திருமணம் தொடர்பான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டார் நடிகை சாயிஷா.
இந்நிலையில் நேற்று இவர்களின் திருமண வரவேற்பு மும்பையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பொலிவுட் பிரபலங்கள் சஞ்சய் தத், ஆதித்யா பஞ்சோளி, சப்யஸாச்சி ஸ்தபதி பங்கேற்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாள நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இன்று இவர்களின் திருமணம் நடைபெற்றது.Previous Post Next Post