பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யாதீர்கள்! -பாகிஸ்தானுக்கு அமெரிக்க அறிவுறுத்தல்- - Yarl Thinakkural

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்யாதீர்கள்! -பாகிஸ்தானுக்கு அமெரிக்க அறிவுறுத்தல்-

இந்திய விமானி அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளதோடு, பயங்கர வாதிகளுக்கு நிதி உதவியை தடுக்குமாறு பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

இந்திய விமானியை விடுவித்த முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியாவையும்  பாகிஸ்தானையும் வலியுறுத்துகிறோம். நேரடியாக பேசுங்கள்.

இராணுவ நடவடிக்கையானதுஇ நிலைமையை மோசமாக்கவே செய்யும். மேலும், பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்றும், அவர்களுக்கு நிதிஉதவியை தடுப்போம் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அளித்த வாக்குறுதியை காப்பாற்றுமாறு பாகிஸ்தானை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
Previous Post Next Post