‘ஹம்பெரெலிய திட்டம்’ மாநகர சபை அமர்வில் அமளி! - Yarl Thinakkural

‘ஹம்பெரெலிய திட்டம்’ மாநகர சபை அமர்வில் அமளி!

யாழ்.மாநகர சபையில் தற்போது நடைபெற்றுவரும் மாதாந்த அமர்வில் உறுப்பினர்களுக்கு இடையில்கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

சபை எல்லைக்குள் கம்பெரலிய திட்டத்தை நடமுறைப்படுத்துவது தொடர்பிலேயே உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக ஹம்பெரெலிய திட்டத்தை சபை எல்லைக்குள் நடமுறைப்படுத்தும் போது அந்தந்த வட்டாரத்தின் மாநகர சபை உறுப்பினர்களுடைய ஆதரவுடன் நடமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகளில் உறுப்பினர்கள் தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும் அவர்களுடைய வாதங்களை மறுதலித்து பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், அத்திட்டமானது மத்திய அரசாங்கத்தின் ஊடாக நடமுறைப்படுத்தப்படுவதால் வட்டார உறுப்பினர்களுடைய ஆதரவு தேவை இல்லை என்றும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடைய வழிடத்தலில் திட்டங்களை நடமுறைப்படுத்தப்பட முடியும் என்று வாதிட்டுகின்றனர்.
Previous Post Next Post