குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல்! -பெற்றோர்களே அவதானம்- - Yarl Thinakkural

குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல்! -பெற்றோர்களே அவதானம்-

நாட்டில் தற்போது பரவிவரும் வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களையும் பாதிக்கும் சாத்தியம் காணப்படுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

வைரஸ் தாக்கத்தினால் வெண்குருதி சிறுதுணிக்கைகள் மற்றும் குருதி சிறுதட்டுக்கள் போன்றவற்றின் அளவில் குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிலை நீடிக்குமாயின் வைத்தியரை நாடவேண்டுமென சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் சிறுவர்களை ஓய்வாக வைத்திருந்தல், இயற்கையான திரவ உணவுகளை வழங்குவதனூடாக வைரஸ் தாக்கத்தை தடுக்கமுடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post