முறைப்பாட்டுக்கான கால எல்லை நீடிப்பு! - Yarl Thinakkural

முறைப்பாட்டுக்கான கால எல்லை நீடிப்பு!

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடுகள் பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிகளுக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், அரச வளங்கள் மற்றும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துதல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடையவிருந்தன.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதிவரைக்கும் குறித்த முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என்று ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Previous Post Next Post