யாழில் மணல் கடத்தல்! -ஒருவர் கைது;மற்றவர் தப்பியோட்டம்- - Yarl Thinakkural

யாழில் மணல் கடத்தல்! -ஒருவர் கைது;மற்றவர் தப்பியோட்டம்-

யாழ்ப்பாணம் - அரியாலை பூம்புகார் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் மற்றுமு் டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டன. டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிவிட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவால் இந்த மணல் கடத்தல்
இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு முறியடிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை பூம்புகார் பகுதியில் நள்ளிரவு வேளையில் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவும் அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் பூங்புகார் பகுதியில் நேற்று நள்ளிரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனம் ஒன்றும் உழவு இயந்திரம் ஒன்றும் இன்று அதிகாலை 2 மணியளவில் மடக்கப்பிடிக்கப்பட்டன. உழவு இயந்திரச் சாரதி தப்பி ஓடிய நிலையில் டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டார்.

உழவு இயந்திரமும் டிப்பர் வாகனமும் மணல் ஏற்றப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Previous Post Next Post