மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி! - Yarl Thinakkural

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது-

கட்டடமொன்றில் நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சார இணைப்பில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீதிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வந்த இரண்டு மாடி கட்டிடமொன்றில் சுவர் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post