சுகயீன விடுமுறை போராட்டம்! - Yarl Thinakkural

சுகயீன விடுமுறை போராட்டம்!

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளை மறுதினம் 13ஆம் திகதி புதன்கிழமை இப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அச் சங்கம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

அதிபர், ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடு என்பவற்றை முன்நிறுத்த குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் உபத் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post