இந்திய விமானி இன்று விடுவிப்பு - Yarl Thinakkural

இந்திய விமானி இன்று விடுவிப்பு

சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக சிறைபிடித்துள்ள இந்திய விமானப்படை கெமாண்டர் அபிநந்தனை பாகிஸ்தான் இன்று விடுவிக்கிறது.
பிற்பகல் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்படுவார்.

பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்தில் இருந்து சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன் என்ற தமிழக வீரர். பாகிஸ்தான் விமானம் தாக்கியதில் அபிநந்தனின் விமானமும் சேதமடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய அவரை பாகிஸ்தான் இராணுவத்தினர் சிறைப்பிடித்தனர்.


Previous Post Next Post