-குருநகரில் மூலை வெடி கொழுத்திய குடும்பஸ்தர்- மணிக்கட்டுடன் கை சிதைவு! - Yarl Thinakkural

-குருநகரில் மூலை வெடி கொழுத்திய குடும்பஸ்தர்- மணிக்கட்டுடன் கை சிதைவு!

யாழ்ப்பாணம் குருநகர் ஐந்து மாடி குடியிருப்பு பகுதியில் உள்ள தேவாலய திருவிழாவின் போது மூலை வெடி கொழுத்திய இளம் குடும்பஸ்தரின் வலது கை மணிக்கட்டுடன் முற்றாக சிதைவடைந்த சோகமான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

அவர் யாழ்ப்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகிறார்.

இந்த வெடிவிபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது.


குருநகரைச் சேர்ந்த  கஜன் (வயது-27) என்ற இளம் குடும்பத்தலைவரே படுகாயமடைந்தார். அவர் அண்மையில்தான் திருமணமானார் என்று தெரிவிக்கப்பட்டது.

மூலை வெடிகள் பலவற்றை ஒன்றாக இணைத்து பற்றவைத்த போது, அதன் பிணைப்பு குடும்பத்தலைவரின் கைக்குள் சிக்கியுள்ளது.அதனால் அவரது வலது கையின் மணிக்கட்டுப் பகுதிக்குள் கீழ் முற்றாகச் சிதவடைந்துள்ளது என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
Previous Post Next Post