சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு! -பதிலளிக்க முடியாமல் பொங்கினர்- - Yarl Thinakkural

சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் பொலிஸார் மீது குற்றச்சாட்டு! -பதிலளிக்க முடியாமல் பொங்கினர்-

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பெலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அரசியல் வாதிகளுடன் பொலிஸார் கடும் தொணியில் பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி கூட்டத்திற்கு தலமை தாங்கிய அரச அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகாரிகள் முன்னே பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பான பதில்வளங்காமல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் மீது சீறிப் பாய்ந்தமை அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்திருந்தது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசா பொலிஸார் பக்கச்சார்பாக நடக்கின்றார்கள், உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ளுகின்றார்கள் இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் மீது சுமத்தினார்.

குறிப்பாக காங்கேசன்துறை வீதி இனுவில் பகுதியில் பொலிஸார் ஓட்டிவந்த வாகனம் மோதி, சிறுவன் ஒருவர் உயிரிழந்துடன், அச் சிறுவனின் தாயார் சுயநினைவற்ற நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவத்தில் விசாரணை செய்த பொலிஸார் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினார்கள். மன்றில் சட்டத்தரணி பிணை விண்ணம்பம் செய்த போது, பிணைக்கான ஆட்சேபனையை பொலிஸார் மன்றில் வெளியிடாத காரணத்தினால் விபத்தினை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் பொலிஸ் உத்தியோகஸ்தர் சம்மந்தப்பட்டுள்ளதாலேயே, மன்றல் பிணைக்கான ஆட்சேபணையை பொலிஸார் தெரிவிக்கவில்லை என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தவராசா முன்வைத்த குற்றச்சாட்டினை மறுதலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தான் பி அறிக்கையில் விளக்கமறியலை நீடிக்குமாறு குறிப்பிட்டுள்ளேன். அதனையும் தாண்டி பிணை வழங்குவதா இல்லை விளக்கமறியலில் வைப்பதா என்பது நீதிவானின் முடிவாகும் என்றார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட தவராசா பொஸ் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை இதனாலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டது என்றார்.

இதனால் கூட்டத்தில் இருந்த சில பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பெங்கி எழுந்து கூட்டத்திற்கு தலமை தாங்கிய யாழ்.அரச அதிபர், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்.மாநகர முதல்வருக்கு முன்னிலையில் தவராசாவுடன் கடும் தொணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இச் சம்பவத்தில் பொலிஸாருடைய கடமையை செய்துவிட்டார்கள், நீதிமன்றம் பிணை வழங்கியதற்கு பொலிஸார் பொறுப்பல்ல, இது தனி ஒருவருடைய பிரச்சினை, இங்கு பொது பிரச்சினையை பேசுங்கள், வேண்டுமானால் தொடர்ந்து வழங்கினை நடாத்துங்கள் என்று தவராசாவிற்கு பதிலளித்தனர்.

இதனால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதை அடுத்து தலையிட்ட வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ்விடயம் தொடர்பில் காங்கேசன்துறை பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்யுங்கள், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை அவர் மேற்கொவார் என்று கூறினார்.
Previous Post Next Post