கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி! -9000 பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு-  - Yarl Thinakkural

கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி! -9000 பேர் வருவார்கள் என எதிர்பார்ப்பு- 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டள்ளதாகத் தெரிவித்திருக்கும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் இம்முறை திருவிழாவிற்கு இலங்கையிலிருந்து 7000 ஆயிரம் வரையான பக்தர்களும் இந்தியாவிலிருந்து 2200 பேர் வரையிலும் வருவார்களென எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

இம்மாதம் 15, 16 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு இறுதிக் கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு அரச அதிபர தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது;-

மேற்படி ஆலய வருடாந்த தீரவிழாவிற்கான முதலாவது ஏற்பாட்டுக் கூட்டம் கடந்த ஐனவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. 

இந் நிலையில் அக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்லது பணிகளின் முன்னெற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதற்காக இறுதிக் கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கின்றது.  

குறிப்பாக கடந்த கூட்டத்திற்கமைய முன்னெடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றங்கள் மற்றும் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது. இதற்கமைய மேற்ப ஆலய உற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் புர்த்தி செய்யப்பட்டுள்ளன. 

இதில் மிக முக்கியமாக இலங்கையைச் சேர்ந்த 7000 ஆயிரம் பேர் வரையிலும் இந்தியாவிலிருந்து 2200 பேர் வரையிலும் பக்தர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இதற்கான அனைத்த ஏற்பாடுகளும் புரு;த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து பொறுப்புக்களையும் இலங்கை கடற்படையினர் செய்கின்றார்க்ள.  

இதில் போக்குவரத்து துறையைப் பொறுத்தவரையில் எதிர்வரும் 15 ஆம் திகதி காலை 3.30 மணி முதல் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஸ்வண்டிகள் குறிகட்டுவானை நோக்கி புறப்படும். அந்தச் சேவைகள் காலை 10.30 மணி வரை தொடர்ந்து நடைபெறும். அதே போன்று 16 ஆம் திகதி காலை முதல் குறிகட்டுவானிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விசேட பேருந்து சேவைகள் நடாத்தப்படும்.  

மேலும் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலன் மற்றும் வசதி கருதி கூடுதலான போக்குவரத்து பஸ் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படுவதோடு குறிகட்டுவானிலும் நீர் மலசல கூட வசிதிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.  

கடந்த முறை போன்று இம்முறையும் கூடுதலான பக்தர்கள் வருவார்களாக இருந்தால் எங்களுக்கு இம்முறையும் ஒரு பிரச்சனை ஏற்படுகின்றது. ஏனெனில் எங்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் படகுகள் சேவைகள் இருக்கின்றன.  

ஆகவே இருக்கின்ற எல்லாப் படகுகளையும் அதில் நாங்கள் ஈடுபடுத்தி இயன்றளவு மக்கள் போக்குவரத்தைச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறோம். 

ஆயினும் கூடுதலான பயணிகள் வருகின்ற போது எல்லோரும் செல்வதென்பது மிக கடினமான காரியமாகத் தான் இருக்கும். 

ஆகவே ஆலயத்திற்கு வரவிருக்கின்றவர்கள் 15 ஆம் திகதி காலையிலையே குறிகட்டுவானிற்கு வந்து படகுகில் ஏறிச் செல்லுமாறு கோருகின்றோம்.  ஏனெனில் பின்னால் வருகின்றவர்களுக்கு படகுச் சேவை வழங்குவது மிக கடினமாகவே இருக்கும். 

ஆகவே 15 ஆம் திகதி காலையிலையே குறிகட்டுவான் நோக்கி பயணித்து படகில் ஆலயத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  இதேவேளை நெடுந்தீவு பிரதேச செயலகம் நெடுந்தீவு பிரதேச சபையினால் கட்ற்படையின் ஒத்துழைப்புடன் முழு அளவிலான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்த்தி செய்யப்பட்டுள்ளன. 

அதிலும் மலசலகூட வசதி குடிநிர் வசிதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.  
Previous Post Next Post