ஏ-9இல் பேருந்து மரத்துடன் மோதி விபத்து! -இரு காலையும் இழந்த சாரதி- - Yarl Thinakkural

ஏ-9இல் பேருந்து மரத்துடன் மோதி விபத்து! -இரு காலையும் இழந்த சாரதி-

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற சொகுசு பேருந்து கிளிநொச்சி பரந்தன் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று நள்ளிரவுவு 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்ற இவ்விபத்தில் பேருந்தின் சாரதி இரு கால்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது:- எ-9 பிரதான வீதி பரந்தன் பகுதியில் வீதுpயோரமாக தரித்து நின்ற டிப்பர் வாகனம் திடீரென வீயில் இறங்கியுள்ளது.

இதனை அவதானித்த பேருந்தின் சாரதி  பேருந்தை திருப்பி டிப்பருடன் விபத்தினை ஏற்படுத்தாதவாறு தடுக்க முற்பட்டுள்ளார்.
பேருந்து சாரதியின் விரைந்த செயற்பாட்டால் பேருந்து டிப்பர் விபத்து அங்கு தடுக்கப்பட்டிருந்து.

இருப்பினும் டிப்பருடன் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்ட போதும் பேருந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் 4 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அதே வேளை பேருந்தின் சாரதி இரு கால்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்ககப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ்நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகனைள மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post