யாழ்.மருத்துவ பீடத்திற்கு 740 மில்லினில் புதிய மாடிக் கட்டடம்! - Yarl Thinakkural

யாழ்.மருத்துவ பீடத்திற்கு 740 மில்லினில் புதிய மாடிக் கட்டடம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் வசதிகள் அதிகரிக்கப்பட உள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி பயிலும் மாணவர்களின் நலன்கருதி ஆறாயிரத்து 6 ஆயிரத்து 500 சதுர அடிகள் கொண்ட ஆறு மாடிக் கட்டிடம் 740 மில்லியன் கோடி செலவில் அமைத்துக் கொடுப்பதற்கு பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் லைக்கா மொபைல் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு புதிய மாடிக் கட்டிடம் மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் அமைப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:

யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை முழுமையான சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை மாடிக்கட்டிடத்தை நிர்மாணித்தல்.

1979ஆம் ஆண்டில் 65 மாணவர்களைக் கொண்ட 1ஆவது குழவை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் தற்பொழுது 937 மாணவர்கள் கல்வி கற்கும் பீடமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இதுவரையில் பல்லின மக்கள் கட்டமைப்பைக் கொண்ட வருடாந்தம் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அபிவிருத்தி கண்டிருந்த போதிலும் அதற்கு அமைவாக அவர்களுக்கு வசதிகளை செய்யும் வகையில் விரிவுரை மண்டபம் விஞ்ஞான பீடம் வகுப்பறை இருப்பிட வசதி முதலான அடிப்படை வசதிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை இடம்பெற்றிருக்கவில்லை.

இலங்கையின் ஞானம் நிதியத்தின் ஊடாக 740மில்லியன் ரூபா முதலீட்டுன் நவீன வசதிகளுடன் 6500 சதுர கிரோமீற்றரும் துணை கட்டிடத்தொகுதி ஒன்று நிர்மாணித்து யாழப்;பாண பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கு பிரிட்டனின் லைக்கா கூட்டுறவு வர்த்தகம் உடன்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்பந்தப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக நகர திட்டமிடல் நீர்விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Previous Post Next Post