நியுசிலாந்து பள்ளிவாசலில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு! -6 பேர் பலி- - Yarl Thinakkural

நியுசிலாந்து பள்ளிவாசலில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு! -6 பேர் பலி-

நியுசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாத நபர்கள் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச்  மருத்துவமனை அருகாமையில் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேலதிக விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

நியுசிலாந்து பயணித்துள்ள பங்களாதேஸ் கிரிக்கட் அணி வீரர்களும்  குறித்த பள்ளிவாசல்கள் ஒன்றின் அருகாமையில் இருந்துள்ளதாக நியுசிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Previous Post Next Post