யாழ் அனலதீவு கடலில் மிதந்த வந்த 6 பொதிகள்! - Yarl Thinakkural

யாழ் அனலதீவு கடலில் மிதந்த வந்த 6 பொதிகள்!

யாழ்ப்பாணம் - அனலை தீவிற்கு வடமேல் பகுதியில் கடலில் கைவிடப்பட்ட நிலையில் மிதந்து வந்த 6 பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொதிகளுக்குள் சுமார் 312 கிலோகிராம் பீடி இலை காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

6 பைகளில் பொதியிடப்பட்டிருந்த குறித்த பீடி இலைகள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலைகள் தொகை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் - சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post