50 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய இராணுவம்! - Yarl Thinakkural

50 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய இராணுவம்!

நாட்டில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக்கோட்டுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் துவிச்சக்கரவண்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு பலாலி பாதுகாப்பு கட்டளைத் தலமையத்தில் இடம்பெற்றது.

கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத்தின் கனிஸ்ர மற்றும் உயர் நிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அத்துடன் 51 வயது படைப்பிரிவின் அதிகாரி றொசான் செனவிரட்னவும் உடண் இணைந்திருந்தார்.
Previous Post Next Post