வடக்கில் 491 தொண்டர் ஆசிரியர் நியமனம்! -அமைச்சரவை அனுமதி- - Yarl Thinakkural

வடக்கில் 491 தொண்டர் ஆசிரியர் நியமனம்! -அமைச்சரவை அனுமதி-

வடக்கில் 491 பேரை தொண்டர் ஆசிரியர்களாக இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு 3 தரம் II இற்கு உள்வாங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் என்பனவற்றுக்கான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் நேற்று முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தும் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தை பூர்த்திசெய்தும், 3 வருடம் தொடர்ச்சியாக சேவையாற்றியும் இருத்தல் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, 30 வருட கால யுத்தம் காரணமாக அவர்களை உள்வாங்கும் போது வயது எல்லை 50 ற்கு மேற்படாமலும், 3 வருடங்கள் தொடர்ச்சியாக சேவையாற்றும் பொழுது அதில் நலன்புரி நிலையங்களிலும் இருந்த காலப்பகுதிகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் எனவும் 55 சதவீத வரவினை பூர்த்தி செய்திருக்க வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

491 பேரை உள்வாங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதானது, வட மாகாண அபிவிருத்தியில் இளைஞர்களுக்கு அரசதுறை வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாய்ப்பாக அமைவதாக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தரமான ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post