காற்றின் வேகம் இன்று 40 கிலோ மீற்றரை தாண்டும்! - Yarl Thinakkural

காற்றின் வேகம் இன்று 40 கிலோ மீற்றரை தாண்டும்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் காற்றின் வேகம் 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை செய்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வியாழக்கிழமை வெளயிட்டுள்ள வானிலை தொடர்பான அறிக்கையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post