கல்வி சுற்றுலா பஸ் கோர விபத்தில்! -ஒருவர் உயிரிழப்பு: 40 பேர் காயம்- - Yarl Thinakkural

கல்வி சுற்றுலா பஸ் கோர விபத்தில்! -ஒருவர் உயிரிழப்பு: 40 பேர் காயம்-

அளுத்கம –கடுகண்ணாவ பகுதியில் நடைபெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 40 பேர்வரை படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அக்கரைப்பற்று – அட்டாளைச்சேனையில் இருந்து அளுத்கமவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற பஸ்சே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பஸ் நடத்துநரான அக்கரைப்பற்று, சவுத் வீதியைச் சேர்ந்த இன்ஹாம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி, மாவனல்லை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்குக் காரணம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post