3000 இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்காவில் தொழில்வாய்ப்பு! - Yarl Thinakkural

3000 இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்காவில் தொழில்வாய்ப்பு!

இலங்கையை சேர்ந்த தாதியர் ஒருவர் அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில்பணியாற்றுவதற்காக முதல் தடவையாக பயணமாகியுள்ளார்.

இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம்  தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர்.

American company, Michigan-based Karma Services நிறுவனத்துடன்  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில்  கைச்சாத்திட்ட உடன்கடிக்கைக்கு அமைவாக  3 000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிட்டவுள்ளது.

இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க மாதாந்த சம்பளம் 5 ஆயிரம் அமெரிக்க ருளு கூ 5000  டொலர்களாகும். இலங்கை பணியாளர்களுக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இது அமைந்துள்ளது.
Previous Post Next Post