மாவா பாக்குடன் கைதான இளைஞருக்கு 2 மாத சிறை - Yarl Thinakkural

மாவா பாக்குடன் கைதான இளைஞருக்கு 2 மாத சிறை

கஞ்சா கலந்த மாவா போதைப் பாக்கினை உடமையில் வைத்திருந்த இளைஞரை 2 மாதங்கள் சிறையில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தைச் செலுத்தவேண்டும் என உத்தரவிட்ட மன்று, அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியது. 

கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் சரை ஒன்றை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தினர். சந்தேகநபர் தன்மீதான குற்றச்சாட்டை ஒத்துக்கொண்டு குற்றவாளி என மன்றுரைத்தார்.

அதன்போதே யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.
Previous Post Next Post