வலி.வடக்கில் 20 ஏக்கர் விடுவிப்பு!  - Yarl Thinakkural

வலி.வடக்கில் 20 ஏக்கர் விடுவிப்பு! 

வலிகாமம் வடக்கில் இரானுவ உயர் பாதுகாப்பு வலியத்திலிருந்து பொது மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று திட்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. 

படையினர் வசமிரந்த காணிகளை விடுவிக்கும் நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற போது யாழ் மாவட்ட இரானுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சி விடுவிக்கப்பட்ட காணிக்கான பத்திரத்தை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகத்திடம் கையளித்தார். 

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J/251, J/253, J/246 ஆகிய கிராம சேவகர் பரிவிலுள்ள காணிகளே இதன் போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் காணி உரிமையாளர்கள், இரானுவத்தினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

நீண்ட காலமாக படையினர் ஆக்கிரமிப்பில் இருந்த இக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்திரந்தனர். இதற்கமைய படிப்படியாக காணிகளும் விடுவிக்கப்பட்டு வந்தன. இந் நிலையிலையே இன்றையதினம் மேலும் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இக் காணிகள் விடுவிக்கப்படுகின்ற நிலையில் அக் காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளைப் பொறுப்பெடுத்து பாதுகாத்துக் கொள்ளுமாறுமாறும் அரச அதிபர் ,பிரதேச செயலாளர்கேட்டக் கொண்டார்.
Previous Post Next Post