2 ரூபா இலபத்தை பார்த்து சிக்கலில் மாட்டிய யாழ்.மாநகர சபை! - Yarl Thinakkural

2 ரூபா இலபத்தை பார்த்து சிக்கலில் மாட்டிய யாழ்.மாநகர சபை!

யாழ்.மாநகர சபையால் மேற்கொள்ளப்படும் கட்டண கழிவகற்றல் நடவடிக்கை உரியமுறையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்று அச்சபை உறுப்பினர்களினாலேயே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரண்டு ரூபா இலபத்தை பார்த்து நிர்வாகம் செய்த வேலையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் மேலும் குறை கூறியுள்ளனர்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு நேற்று செவ்வாய் கிழமை காலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் கட்டண கழிவகற்றல் உரிய மறையில் நடைபெறவுவதில்லை.

கட்டண கழிவகற்றலை குத்தகைக்கு பெற்றுக் கொண்டவர் கழிவகற்றும் நடவடிக்கையில் அசமந்த போக்கினை காட்டி வருகின்றார். இது தொடர்பில் ஏராளமான மக்கள் எம்மிடம் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளதுடன், பல்வேறு அசௌகரியங்களை அவர்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள் என்று சபையில் தெரிவித்தனர்.

இதற்கு பதிளித்த முதல்வர் இமானுவேல் ஆனல்ட் கட்டண கழிவகற்றல் நடவடிக்கை கடந்த காலங்களில் சீராக நடைபெற்றது.

இம்முறை குத்தகைக்கு விடப்படும் போது, கோரல் விலையில் ஒருவர் 2 ரூபா குறைவான தொகையினை போட்டிருந்தார். இதனால் அந்த புதியவருக்கு கட்டண கழிவகற்றல் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் அந்த செயற்பாட்டை சீராக செய்யவில்லை.

இவருடைய பெறுப்பற்ற தன்மையானல் சில பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக யாழ்.மாநகர சபையின் வளத்தினை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிதாக கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவரை நிறுத்தி, முன்னர் கட்டண கழிவகற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டவரை இன்று முதல் பணிக்கு அமர்த்த தீர்மானித்துள்ளோம் என்றார்.
Previous Post Next Post