16 கிலே மாவா பாக்குடன் ஒருவர் கைது! - Yarl Thinakkural

16 கிலே மாவா பாக்குடன் ஒருவர் கைது!

கஞ்சா காலந்த மாவா போதை பாக்கினை விற்பனை செய்த குற்றத்தில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்திவிட்டு அதே நாள் மீண்டும் மாவா பாக்கினை விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு சந்தேகநபர் சுமார் 16 கிலோ கிராம் மாவா போதைப்பாக்கு பொதிகளுடன் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

"யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரட்னவின் கீழான சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சந்தேகநபர் தனது உடமையில் மாவா போதைப் பாக்கு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் புதன்கிழமை குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வீடு யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சோதனையிடப்பட்டது. அதன்போது விற்பனைக்குத் தயாராகப் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 16 கிலோகிராம் மாவா போதைப் பாக்கினை கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவர் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Previous Post Next Post