விழுந்து நொருங்கிய எதியோப்பிய விமானம்:149பேர் பலி? - Yarl Thinakkural

விழுந்து நொருங்கிய எதியோப்பிய விமானம்:149பேர் பலி?எதியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபி நோக்கி சென்ற எதியோப்பின் ஏயார் லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் இதில் பயணித்த 149பயணிகள் உயிரிழந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு ஆபிரிக்க நாடான எதியோப்பாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எதியோப்பியன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள் மற்றும் 8ஊழியர்களுடன் இன்று  காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது.

எனினும் நைரோபி செல்லும் வழியில் இந்த விமானம் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 149பயணிகள் மற்றும் 8ஊழியர்கள் உயிரிழந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post