14 சீனர்களை சிறையில் தள்ளிய காலி நீதவான! - Yarl Thinakkural

14 சீனர்களை சிறையில் தள்ளிய காலி நீதவான!

நாட்டிற்குள் சுற்றுலா வீசா மூலம் பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்றைய தினம் காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீன பிரஜைகள் 14 பேரும் அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கட்டிட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்த நிலையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post