13.3 மில்லியன் பெறுமதியான 88 கிலே கஞ்சா மீட்பு! - Yarl Thinakkural

 13.3 மில்லியன் பெறுமதியான 88 கிலே கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் தொடரும் கஞ்சா வேட்டையினை தொடர்ந்து பருத்தித்துறைக் கடற்கரையில் 88 கிலோ கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், கடற்படையினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 13.3 மில்லியன் ரூபாய் என கணிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
Previous Post Next Post