சிறைச்சாலை திணைக்களத்தில் 1275 பேருக்கு வேலைவாய்ப்பு! - Yarl Thinakkural

சிறைச்சாலை திணைக்களத்தில் 1275 பேருக்கு வேலைவாய்ப்பு!

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக 1068 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 110 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2ஆம் நிலை ஆண் ஜெயிலர் பதவிக்கும் பெண் ஜெயிலர் பதவிக்காக 10 பேரும் புனர்வாழ்வு ஆண் அதிகாரிகளாக 15 பேரும் பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக மூவரும் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post