மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் 11வது நினைவேந்தல்!  - Yarl Thinakkural

மாமனிதர் கிட்டினன் சிவனேசனின் 11வது நினைவேந்தல்! 

மாமனிதர் கிட்டினன் சிவநேசனின் 11ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு இன்று புதன்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நினைவுகூரப்பட்டது. 

நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் செல்வி பிரிந்தா தலைமையில் இன்று பிற்பகல் 05.30 மணியளவில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலரஞ்சலி, நினைவுரை ஆகியன நடைபெற்றன.

2008-03-06 அன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது கண்டிவீதியில் மாங்குளம் பிரதேசத்திலுள்ள கொல்லர் புளியங்குளம் பகுதியில் வைத்து சிங்கள பௌத்த பேரினவாத படைகளின் ஆழ ஊடுருவும் அணியினரால் கிளைமோர் தாக்குதல் மூலம் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் அவரும் அவரது சாரதியும் உயிரிழந்தனர். 

சிவநேசன் அவர்களின் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருது வழங்கி கௌரவித்திருந்தார்.





Previous Post Next Post