விமானப்படைக்கு ராகுல் சல்யூட் - Yarl Thinakkural

விமானப்படைக்கு ராகுல் சல்யூட்இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தன. பதிலடி தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில்,

இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட் என்று குறிப்பிட்டு இந்திய தேசிய கொடி லோகோவையும் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post