யாழ்.போதனா வைத்தியசாலை விவகாரம்! -கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பணிப்பாளர்- - Yarl Thinakkural

யாழ்.போதனா வைத்தியசாலை விவகாரம்! -கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய பணிப்பாளர்-

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்கள் இருவர் தொடர்பாக அண்மைய நாட்களில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் விளக்கமளிக்க நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை கூட்டிய யாழ்.போதானா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது திணறினார்.

சில கேள்விகளை ஊடகவியலாளர்கள் எழுப்பியபோது, அவற்றுக்கு பதிலளிக்க முடியாத அவர், இக்கேள்விகளை எழுத்து மூலம் கேளுங்கள் எனப் பதிலளித்தார். அத்துடன், ஊடகவியலாளர்களுடனான சந்திப்பையும் அறைகுiறாயக அவர் முடித்துக்கொண்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியொன்றில் இரு பணியாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர் என ஊடகங்கள் பலவற்றில் அண்மைய நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செய்தியகள் தொடர்பில் விளக்களிக்கும் வகையிலேயே யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி நேற்று செவ்வாக்கிழமை ஊடகவியலாளர்களை சந்திப்புக்காக அழைத்திருந்தார்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த பணிப்பாளர், யாழ்.போதனா வைத்திய சாலையில் ,டம்பெற்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் ,ல்லை என்றார். அவ்வாறான செய்தி என்னால் வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட விடுதியில் பொறுப்பாக இருந்த வைத்திய நிபுணரும் இச்சந்திப்பில் உடனிருந்தார்.

இவ்வாறான ஒரு சம்பவம் தமது விடுதியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களே இல்லை என்று அவர் தெரிவித்தார். ஏனெனில் அன்றைய தினம் குறித்த விடுதியில் கடமையில் இருந்தவர்கள் அனைவருமே பெண் தாதியர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் குறுக்கிட்ட ஒரு ஊடகவியலாளர், குறித்த தினத்தில் தாங்கள் குறிப்பிடுவது போல் பெண் தாதியர்கள் மட்டுமே கடமையில் இருந்தார்களாயின் அன்றைய நாள் தினவரவு இடாப்படை காண்பிக்கு முடியுமா? என்று கேட்டார்.

ஊடகவியலாளரின் கேள்வியால் திக்குமுக்காடிய பொறுப்பு வைத்திய நிபுணர் செய்வதறியாது திகைத்தார். வைத்தியசாலை பணிப்பாளரை அவர் பார்க்க விடயத்தை புரிந்து சுதாகரித்துக் கொண்ட பணிப்பாளர் திடீரென குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை நோக்கி நீங்கள் பொலிஸார் போன்று எம்மிடம் கேள்வி கேட்க முடியாது என்று எரிந்து விழுந்தார்.

தேவையெனில் எழுத்து மூலம் கோருங்கள் பதிலளிக்கிறேன் என்று தெரிவித்து அத்துடன் ஊடக சந்திப்பை முடித்துக்கொண்டார்.
Previous Post Next Post