விஜய்க்கு மரண மாஸ் பெயர் குடுத்த அட்லி! - Yarl Thinakkural

விஜய்க்கு மரண மாஸ் பெயர் குடுத்த அட்லி!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் விஜய்யின் பெயர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் 63வது படத்தில் நடிக்கயிருக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு,ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லு படத்துக்கு பின் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் துவங்கி நடக்கிறது. வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கும் விஜய், சரியான உடற்கட்டு பெற கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்கார் படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது எகிற துவங்கியுள்ளது.
Previous Post Next Post