ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி - Yarl Thinakkural

ஜெயலலிதாவை புகழ்ந்த மோடி


தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச்சிறந்த நிர்வாகி, கருணையுள்ளம் கொண்டவர் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்த நாள் இன்று விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு என்னுடைய அஞ்சலியை தெரிவிக்கின்றேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு தலைமுறைக்கும் நினைவில் நிற்க கூடியது. மிகச்சிறந்த நிர்வாகி, கருணை உள்ளம் கொண்டவர், கணக்கில் அடங்காத ஏழை மக்களுக்கு அவரின் நலத் திட்டங்களால் பயனடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post