யாழில் வெளிநாட்டு சிகரட்டுடன் இளைஞர் கைது! - Yarl Thinakkural

யாழில் வெளிநாட்டு சிகரட்டுடன் இளைஞர் கைது!

வெளிநாட்டு சிகரெட் பக்கற்றுக்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் திடீர் தெடுதலை முன்னெடுத்த யாழ்ப்பாணம் சிறப்பு பொலிஸ் பிரிவினர், அங்கிருந்து வெளிநாட்டு சிகரெட் பக்கற்றுக்கள் ஐந்தை மீட்டனர்.

அதனை தனது உடமையில் வைத்திருந்தார் என்று உணவக உரிமையாளரைப் பொலிஸ் சிறப்புப் பிரிவினர் கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன், அவரிடம் கைப்பற்றப்பட்ட சிகரெட் பக்கற்றுக்களையும் கையளித்தனர்.

உணவக உரிமையாளர் விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post