தப்பியோடிய இந்திய விமானங்கள் -பாக்.இராணுவ தளபதி கேலி- - Yarl Thinakkural

தப்பியோடிய இந்திய விமானங்கள் -பாக்.இராணுவ தளபதி கேலி-


எல்லையை அத்துமீறி பாகிஸ்தானின் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட இந்திய விமான படையின் போர் விமானங்கள் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடியதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் கேலி செய்துள்ளார்.

இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆனால் பாகிஸ்தான் விமானப்படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய விமானங்கள் திரும்பி சென்றன.

முஸாபராபாத் செக்டாரில் இந்திய விமானங்கள் அத்துமீறி நுழைந்த போது உரிய நேரத்தில் பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்க அவசரமாக வெற்றிடத்தில் வெடி பொருளை போட்டு விட்டு இந்திய விமானங்கள் தப்பியோடின. பாலாகோட் பகுதியில் வெடிபொருள் விழுந்துள்ளது. இதில் எவ்வித உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. மேலும் தொழில்நுட்ப தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என பதிவிட்டுள்ளார்.

Previous Post Next Post