-செம்பியன்பற்று மாமுனையில் புலிகளின் ஆயுதக் கிடங்கு- அகழ்வுகள் ஆரம்பம்! - Yarl Thinakkural

-செம்பியன்பற்று மாமுனையில் புலிகளின் ஆயுதக் கிடங்கு- அகழ்வுகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த  பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். 


அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. 

குறித்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே அவ்வாயுத கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது அங்கு வந்துள்ள பளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பைக்கோ மூலம் அகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.Previous Post Next Post