எரிபொருள் விலை அதிகரிப்பில் அரசின் தில்லு முல்லு! - Yarl Thinakkural

எரிபொருள் விலை அதிகரிப்பில் அரசின் தில்லு முல்லு!

நாட்டில் எரிபொருட்களுக்கான விலையை அரசாங்கம் அதிகரிக்கும் போது, அரசாங்கம் இரகசியமாக வரியையும் அதிகரித்துள்ளதாக ஸ்ரீரீலங்கா பொதுஜன முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்தார்.

அதன்படி, 1 லீற்றர் பெற்றோலில் 1 ரூபாவையும் , 1 லீற்றர் டீசலில் 2 ரூபாவையும் இம்முறை விலை அதிகரிப்பின் போது அரசாங்கம் வரியாக அறவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனூடாக நாட்டின் பெரருளாதார ஸ்திரமின்மையை காணக்கூடிதாய் உள்ளது என அவர் சுட்டிக்காட்டுயுள்ளார்.
Previous Post Next Post