ஜெயசூரியவிற்கு அதிரடி தடை! - Yarl Thinakkural

ஜெயசூரியவிற்கு அதிரடி தடை!

சனத் ஜெயசூரியவிற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை இரண்டு வருடங்களுக்கு தடை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கட்டில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளை சர்வதேச கிரிக்கட் பேரவையின் மோசடி எதிர்ப்பு பிரிவு நடத்திவந்தது.

இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தவறியமைக்காக அவருக்கு 2 ஆண்டுகால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் சனத்ஜெயசூரிய கிரிக்கட் சார்ந்த எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சனத் ஜெயசூரியவின் மீது சர்வதேச கிரிக்கட் பேரவையின் மோசடி எதிர்ப்புக் குழு இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

அதன்படி மோசடி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் விசாரணைகளுடன் சம்மந்தப்பட்ட ஆவணங்களை மறைத்தமை அல்லது அழித்தமை என்பன அந்தக் குற்றச்சாட்டுகளாகும்.

அத்துடன் சனத் ஜெயசூரிய தமது கைப்பேசியை விசாரணைகளுக்கு வழங்கவும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே சனத் ஜெயசூரியவிற்கு 2021ம் ஆண்டு வரையில் கிரிக்கட் சார்ந்த எந்தவிதமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post