இரத்தினபுரியில் துப்பாக்கி சூடு! -ஒருவர் படுகாயம்- - Yarl Thinakkural

இரத்தினபுரியில் துப்பாக்கி சூடு! -ஒருவர் படுகாயம்-

இரத்தினபுரி - ரத்தெல்ல வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கல்கமுவ - கரன்கொட பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இதன்போது காயமடைந்துள்ளார்.

எவ்வாறாயினும் , துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர்  தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post