இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்த தடை - Yarl Thinakkural

இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்த தடை

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் 'ஸ்மார்ட் போன்’ பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் இராணுவம் குறித்த இரகசிய தகவல்கள் பொது வெளியில் கசிவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென இராணுவ அதிகாரிகள் வலியுறுத்தினர்.

அவ்வகையில் இராணுவ வீரர்கள் ‘ஸ்மார்ட்போன்’ பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற கீழ் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 450உறுப்பினர்களில் 400இற்கும் மேற்பட்டோர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
எனினும் இந்த மசோதா நாடாளுமன்ற மேல் சபையிலும், கூட்டமைப்பு கவுன்சிலிலும் நிறைவேற வேண்டும். அதனை தொடர்ந்து ஜனாதிபதி புடின் அந்த மசோதாவில் கையெழுத்திட்டு பின்னர் சட்டமாக இயற்றப்பட்டு அமுலுக்கு வரும்.

Previous Post Next Post