யாழில் சம்பிக்க ரணவக்க! - Yarl Thinakkural

யாழில் சம்பிக்க ரணவக்க!

யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை வருகைதந்துள்ள ஜாதிக கெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் பங்கு கொண்டுவருகிறார். 

இதற்காக இன்று யாழ்ப்பாணதிற்கு விஐயம் மேற்கொண்ட அமைச்சர் யாழ் புகையிரதம் நிலையம் முன்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நாட்டும் நிலையான திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ் நீதி மன்ற தொகுதிக்கு முன்பாக யாழ்ப்பாண நிர்வாக தொகுதிக்கான அடிக்ல்லை நாட்டி வைத்தார். இதன் பின்னர் தூர சேவை பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். 

இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், தமித்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Previous Post Next Post