யாழ்.மாநகர பகுதியில் மின்குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம்! - Yarl Thinakkural

யாழ்.மாநகர பகுதியில் மின்குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம்!

யாழ்ப்பாணம்  மாநகர சபைக்குட்பட்ட ஜே.85, ஜே.86, ஜே.88 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலும், அபூபக்கர் வீதியில் உள்ள கதீஜா பெண்கள் கல்லூரி உட்புறமும், யாழ் சின்னப்பள்ளி மைய்யவாடிக்கும் புதிதாக மின்சார விளக்குகள் பொருத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட மீள்குடியேற்ற இணைப்பாளர் எஸ்.சுப்யானினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டறவு அபிவிருத்தி அமைச்சருமான  றிசாத் பதியுதீனிடம்  முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Previous Post Next Post