யாழ்-கொழும்பு பஸ் மீது செம்மணியில் வைத்து கல்வீச்சு! - Yarl Thinakkural

யாழ்-கொழும்பு பஸ் மீது செம்மணியில் வைத்து கல்வீச்சு!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அன்னை முத்துமாரி பேருந்தின் மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் இந்த சம்பவம் செம்மணிப் பகுதியில் நடைபெற்றுள்ளது. இதன் போது பேருந்தின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பேருந்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திலேயே பேருந்து நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதில் சென்ற பயணிகள் சிரமங்களை எதிர் கொண்டிருந்தனர்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்துகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போட்டியால் நடத்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


Previous Post Next Post