எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு! - Yarl Thinakkural

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

காத்தான்குடி தாளங்குடா வேடர்குடியிருப்புப் பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து தாளங்குட கடற்கரை பகுதியை அண்டிய வேடர்குடியிருப்புப் பிரதேசத்திலுள்ள காணியொன்றில் முற்றாக எரிந்த நிலையில், மண்டை ஓடு, எலும்புக்கூடு கொண்ட மேற்படி சடலத்தைப் பொலிசார் மீட்டுள்ளனர். 

மீட்கப்பட்ட சடலம், 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவருடையது எனவும் அவர் யார் என இதுவரை அடையாளங் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்  
Previous Post Next Post