அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை! - Yarl Thinakkural

அஜித்துடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக்கை வினோத் இயக்க நடிகர் அஜித் நடிக்க விருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார்.

தல 59 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறும் போது, வித்யாபாலன் தமிழில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. அவர் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கிறார். அவருக்கு சிறப்பான ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றனர் என்றார்.
Previous Post Next Post