இந்தியாவுக்கு வான வேடிக்கை காட்டிய மக்ஸ்வெல்! - Yarl Thinakkural

இந்தியாவுக்கு வான வேடிக்கை காட்டிய மக்ஸ்வெல்!

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட கடின இலக்கை மக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தால் இலகு இலக்கியதால் ரி-20 தொடரை ஆஸ்ரிரேலியா கைப்பற்றியது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய  இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 தொடர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடுகின்றது. இதில் முதலாவது ரி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் இரண்டாவதும் இறுதியுமான போட்டி நேற்று புதன்கிழமை இரவு பெங்களூரில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலாவதாக ஆடுகளம் நுழைந்து துடுப்பெடுத்தாடுத்தாடிய இந்திய அணி கோலி – தோனி ஜோடியின் அதிரடியால் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களையிழந்து 190 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் விராட் கோலி 38 பந்துகளில் 70  ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். அத்துடன், கே.எல்.ராகுல் 47 ஓட்டங்களையும் தோனி  40 ஓட்டங்களையும் எடுத்தனர்.

191 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணியின் முதல் இரண்டு விக்கெட்டுக்களும் 22 ஓட்டங்களில் அடுத்தடுத்து சரிந்தமையினால் அரங்கத்தில் ரசிகர்களின் ஆரவாரம் அதிகரித்தது.

எனினும் அந்த ஆரவாரத்தை மக்ஸ்வெல் தனது அதிரடி சதத்தால் அடக்கினார். ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரமிந்து194 ஓட்டங்களைக் குவித்து இலகுவான வெற்றியைப் பெற்றது.

இதன்மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2:0 என்ற கணக்கில் முழுமையாக சுவீகரித்து இந்தியாவுக்கு அதன் சொந்த மண்ணில் வெள்ளையடித்தது.

ஆஸ்திரேலிய அணி சார்பாக மக்ஸ்வெல் 55 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்களாக 113 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
Previous Post Next Post